ஈரான் அரசு அணு ஆயுத உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டு தாக்குதலை நடத்தி வருகின்றன.. கடந்த சில நாட்களாகவே ஈரான் கடுமையான தாக்குதல்களை சந்தித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.. பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனியும் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. எனவே அந்த நாட்டில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள்.. அந்த நாடுகளில் எல்லாம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த போர் காரணமாக பல கப்பல்களில் உள்ள மாலுமிகளும், அதில் பணிபுரிபவர்களும் தவித்து வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஈரான் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 148 பேர் வரை பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்திய பெருங்கடலில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
அதேபோல் ஈரான் – இஸ்ரேல் போரால் பெர்சியா வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் 36 இந்திய வர்த்தக கப்பல்கள் சிக்கி தவித்து வருகிறது.. நகர முடியாமல் நிற்கும் அந்த கப்பல்களில் இந்திய மாலுமிகள் சுமார் 1100 பேர் சிக்கியிருக்கிறார்கள்.தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

