விளையாட்டு

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற ஆவலில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இரண்டு கட்டங்களாக வெளியிட ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, முதல் கட்ட அட்டவணை மார்ச் 6 அல்லது 7-ம் தேதிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், மேற்கு வங்கம்,  மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை கருத்தில் கொண்டு, இரண்டாவது கட்ட அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

பாதுகாப்பு பணிகள் மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படுமா அல்லது இந்தியாவிலேயே தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் போட்டிகள் நடைபெறாதா? என்ற விவாதங்களுக்கு மத்தியில், இந்த இரண்டு கட்ட அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்