தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் திரிஷா.. துவக்கத்தில்சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் கில்லி, சாமி போன்ற படங்கள் இவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதன்பின் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நம்பர் ஒன் நடிகையாகவும் மாறினார்..
ஆனால், நயன்தாரா இவரை ஓவர்டேக் செய்து நம்பர் ஒன் இடத்தை பிடித்ததால் திரிஷா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனாலும் விண்ணைத்தாண்டி வருவாயா, பொன்னியின் செல்வன் போன்ற ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட்டை நிலைநிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில்தான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை திரிஷா பகிர்ந்திருக்கிறார்.. நேற்று சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜயுடன் திரிஷா கலந்து கொண்ட போது அணிந்திருந்த அதே புடவையுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.
சங்கீதா விவாகரத்து கேட்டு விண்ணப்பத்திருக்கும் நிலையில், நேற்று விஜய் திரிஷாவுடன் சென்றதை பலரும் விமர்சித்து வரும் நிலையில் ‘I dont care’ என சொல்வது போல இந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் திரிஷா.

