திரைத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் விவாகரத்து செய்து கொள்வது என்பது தற்போது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.. அப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட ஆணின் மீது பல புகார்களை சொல்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் கடுமையாக திட்டுகிறார்கள்.
இதையடுத்து பெண்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள்.. ஆண்கள் குற்றவாளிகள் என்பது போல ஒரு தோற்றமும் உருவாகிறது.. அதாவது பெண்களுக்கு சட்டம் கொடுத்துள்ள பாதுகாப்பை பல பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆணை பலரும் மோசமாக விமர்சிக்கிறார்கள். எல்லா பலியும் அந்த ஆணின் மீதே விழுகிறது.
சில இடங்களில் ஆண்கள் மீது தவறு இருந்தாலும் சில இடங்களில் பெண்களின் மீதும் தவறு இருக்கிறது.. ஆனால், எல்லா குடும்பப் பிரச்சனையிலும் ஆண் மட்டுமே காரணம் எனவும் சொல்லிவிட முடியாது.. இதை பல பிரபலங்கள் கடந்து வந்திருக்கிறார்கள்.
பல பிரபலங்கள் மனைவியை பிரிந்து வாழ்கிறார்கள்.. சமீபத்தில் கூட விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றதும், ஒரு நடிகையோடு விஜய்க்கு தொடர்பு இருப்பதாக சொன்னதும், அது நடந்த சில நாட்களிலேயே விஜய் திரிஷாவை கூட்டிக்கொண்டு ஒரு திருமண விழாவிற்கு சென்றதும் சர்ச்சையானது.
இந்நிலையில்தான், நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்’பெண்கள்தான் எப்போதும் சரி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.. பல நேரங்களில் ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.. அதை நீதிமன்றங்கங்களும் புரிந்திருக்கிறது.. ஒருநாள் என் மனதையும் நான் நேசிக்கும் மக்களுக்காக செய்த பற்றியும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.. தயவு செய்து ஒருவரை அமைதியாக வாழ விடுங்கள்.. உங்கள் தவறான எண்ணங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

