வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன். வழக்கமாக தனுசுடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன் சிம்புவுடன் கூட்டணி அமைத்ததால் அரசன் படம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி சில நாட்கள் நடந்தது.. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த பல நாட்களாகவே அரசன் ஷூட்டிங் நடக்கவில்லை. சிம்புவும் வெளிநாட்டுக்கு போய்விட்டார். கோவில்பட்டியில் லைவ் லொகேஷனில் எடுத்த காட்சிகள் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லையாம். அதோடு அங்கு காட்சிகளை சவுகரியமாக எடுக்க முடியவில்லை என்பதால் அதே காட்சிகளை மீண்டும் சென்னையில் செட் போட்டு எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டார். ஆனால் அதற்கு பல கோடி செலவாகும் என்பதால் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது.. தற்போது ஒரு வழியாக தரமணி பகுதியில் செட் அமைக்கப்பட்டு விட்டது.
வருகிற 16-ஆம் தேதி இந்த இடத்தில் அரசன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்குகிறது.. இந்த படத்தில் சிம்புவுக்கு மூணு கெட்டப் என சொல்லப்படுகிறது.. அதில் ஒரு கெட்டப்பில் சிம்பு வயதான வேடத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த கெட்டப்பில் சிம்பு நடிக்கும்போதுதான் விஜய் சேதுபதி நடிப்பார் என சொல்லப்படுகிறது.

