தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திரிஷா. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர். லேசா லேசா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தொடர்ந்து பல வருடங்கள் பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினர். விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஷால், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
தற்போதும் கோலிவுட்டில் முக்கிய நடிகையாக திரிஷா இருக்கிறார். ஒருபக்கம் விஜயுடன் இவருக்குள்ள உறவு பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சில நாட்களிலேயே விஜய் திரிஷாவை கூட்டிக்கொண்டு ஜோடியாக ஒரு திருமணத்துக்கு போனார்.. எனவே பெண்களின் கோபத்திற்கும் விஜய் ஆளானார்.
திரிஷாவின் சொந்த வாழ்க்கையில் அவருக்கு சில காதல்கள் உண்டு. பாகுபலி புகழ் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்தார். அது பிரேக் அப் ஆனது. அதன் பின் தொழிலதிபர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து. அதுவும் பிரேக் அப் ஆனது. தற்போது நடிகர் விஜயுடன் திரிஷா கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

