லெஜென்ட் சரவணா நிறுவனர் சரவணன் நடித்துள்ள திரைப்படம் லீடர். இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 3ம் தேதி தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா ‘நான் படத்தில் லெஜென்ட் சரவணாவை திட்டியிருக்கிறேன்.. எனவே நான் சில நாட்களுக்கு சரவணா துணிக்கடை பக்கம் போக முடியாது.. இந்த படத்தில் என் கணவரும் நடித்திருக்கிறார்.. வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அப்படியே படத்திலும் இருந்தார்.. நான் வாயை திறந்து விடுவாரா என்னை எட்டிப் பார்த்தேன்.. உங்கள் கணவரிடம் ரியாக்சன் குறைவாக இருக்கிறது என இயக்குனர் சொன்னர். 10 வருடங்களாக அவரிடம் எந்த ரியாக்சனும் இல்லை.. இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்.. இந்த படத்தில் நிஷாவையே ஹீரோயினாக போட்டிருக்கலா என லெஜண்ட் சரவணா யோசித்திருப்பார்’ என்று பேசினார்.
அவருக்கு பின் பேச வந்த நடிகர் விடிவி கணேஷ் ‘இங்க நிறைய பேர் பேசினாங்க.. எல்லாரும் படத்த பத்தி பேசினாங்க.. ஆனா அறந்தாங்கி நிஷா தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசினாங்க.. அவங்க படத்தை பற்றி எதுவும் சொல்லல.. அவங்க ஹீரோயின் ஆக வேண்டுமா?.. விவஸ்தையே இல்லையா?.. இதெல்லாம் கேட்டா நமக்கு சிரிப்புதான் வருது’ என்று பேசினார்.
அவர் பேச பேச லெஜண்ட் சரவணன் முகமே மாறிவிட்டது.. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரால்கி வருகிறது. பலமுறை சினிமா மேடைகளில் விடிவி கணேஷ் இப்படி சர்ச்சையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

