2026 ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறார். ஏனெனில், தனது முன்னாள் மனைவி மற்றும் இந்நாள் காதலி இருவருக்கு அவர் கொடுக்க விலை உயர்ந்த காஸ்ட்லி கார்கள்தான் இதற்கு காரணம். கடந்த 35 நாட்களில் மட்டும் பரிசுகள் கொடுப்பதற்காகவே 17.7 கோடிகளில் செலவு செய்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
பிப்ரவரி 22ஆம் தேதி தனது 5 வயது மகன் அகஸ்தியாவுக்கு 4 கோடி மதிப்பிலான Land Rover Defender காரை ஹரிக் பாண்டியா பரிசாக கொடுத்தார். மேலும், அகஸ்தியாவின் தாயும், முன்னாள் மனைவிக்கும் ஒரு சொகுசு காரை பரிசளித்தார்.
அதன்பின் மார்ச் 15ம் தேதி அவரின் காதலி மகிகா சர்மாவுக்கு 12 கோடி மதிப்பிலான Ferrari 12 Clindri காரை பரிசாக கொடுத்தார். அதன்பின் மார்ச் 29ஆம் தேதி 1.7 கோடி மதிப்புள்ள MERCEDES BENZ V CLASS காரையும் காதலிக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

