சினிமா

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி – அல்லு அர்ஜுன்!

ராஜா ராணி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களையும் இயக்கினார். இதன் காரணமாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அப்படி அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் உலகமெங்கும் 1300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாரணை படைத்தது.

இந்த படத்திற்கு பின் யாரை வைத்து அட்லி படம் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனோடு கைகோர்த்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை ஹாலிவுட் எழுத்தாளர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் அட்லி. மேலும் இந்த படத்தில் நிறைய ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிகிறார்கள்.. அதோடு படமும் ஹாலிவுட் தரத்தில் உருவாகவிருக்கிறது.

இந்நிலையில்தான், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது.. படத்திற்கு ராக்கா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் பாதி மனிதன் பாதி ஓநாய் என்பது போல போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள். ராக்கா என்றால் என்ன என்கிற கேள்வி ரசிகர்க்ள் மனதில் எழுந்திருக்கிறது. இது ஹிந்தியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சொல் என்கிறார்கள்.. ராக்கா என்றால் முழு நிலவு என அர்த்தமாம்.. அதாவது இரவில் முழு நிலவில் ஓநாயாக மாறும் வேடத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார் என்கிறார்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்