திரைத்துறையில் நிலவும் ஆரோக்கியமான பெண் நட்புகள் குறித்து நடிகை மிருணாள் தாக்கூர் சமீபத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தனது Dacoit: Ek Prem Katha திரைப்படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள மிருணாள், நடிகை தமன்னாவுடனான தனது ஆழமான நட்பை பற்றி பெருமிதமாக பேசியுள்ளார்.
“தமன்னா மிகவும் தூய்மையான குணம் கொண்டவர். அவர் எனக்கு ஒரு சகோதரியை போன்றவர். ஆரம்ப காலங்களில் என்னால் பெண்களுடன் தோழமையாக இருக்க முடியாது என்று நினைத்தேன், ஆனால் இப்போது பெண் நட்புகளை கொண்டாடுகிறேன்.
ஹைதராபாத் செல்லும் ஒரு விமான பயணத்தில் நாங்கள் சந்தித்தோம், அங்கிருந்துதான் எங்களது பந்தம் தொடங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார். தமன்னா தமக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாகவும், எந்தவொரு பிரச்சனைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
இவர்கள் இருவரும் 2023-ல் நெட்ஃபிக்ஸ் வெளியீடான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ தொடரில் வெவ்வேறு கதைகளில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

