விளையாட்டு

சிஎஸ்கே அணி தோல்வி.. ஆனாலும் புள்ளிப்பட்டியலில் மேலே? எப்படி நடந்தது இந்த ஆச்சரியம்..!

ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஒரு படி முன்னேறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 195 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பொதுவாக ஒரு அணி தோற்றால் புள்ளிப்பட்டியலில் கீழே செல்லும் அல்லது அதே இடத்தில் நீடிக்கும். ஆனால், இந்த போட்டியில் சிஎஸ்கே அணி மிக குறைந்த ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அதன் நிகர ரன் ரேட் -0.846 என்பதிலிருந்து -0.780 ஆக மேம்பட்டது.

இதன் விளைவாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி 8-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. லக்னோ அணியும் 4 புள்ளிகளுடன் உள்ள போதிலும், அதன் ரன் ரேட் -0.804 ஆக இருப்பதால் 8-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் இஷான் மலிங்கா மற்றும் இளம் சுழற்பந்துவீச்சாளர் ஷிவாங் குமார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு சிஎஸ்கே அணியின் வெற்றியை தடுத்தது. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரஃபுல் ஹிங்கே சிறப்பாக பந்துவீசி சிஎஸ்கே அணியை 184 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்