சினிமா

ஒரு மேக்கப்புக்கு ஒரு லட்சம்..! – நடிகை நிதி அகர்வால் சொன்ன ஷாக் தகவல்!

திரையுலகில் மின்னும் நட்சத்திரங்களின் வாழ்க்கை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் சொகுசாகத் தெரிந்தாலும், அந்த அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள அவர்கள் ஒவ்வொரு மாதமும் செய்யும் செலவுகள் சாமானியர்களைத் தலைசுற்ற வைக்கும் விதமாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி நடிகை நிதி அகர்வால் தனது மாதாந்திர செலவுகள் குறித்த ரகசியங்களை உடைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பன்மொழித் திரைப்படங்களில் பிஸியாக வலம் வருபவர் நிதி அகர்வால். தமிழில் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் மூலம் அறிமுகமான அவர், அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘பூமி’ மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும், தமிழில் எதிர்பார்த்த ஒரு பெரிய ‘பிளாக்பஸ்டர்’ வெற்றி அவருக்கு அமையவில்லை. இதன் காரணமாக, தற்போது அவர் தனது முழுக் கவனத்தையும் தெலுங்குத் திரையுலகின் பக்கம் திருப்பியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், ஒரு நடிகையாகத் தன்னைத் திரையில் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டிக்கொள்ளச் செய்யும் செலவுகள் குறித்து நிதி அகர்வால் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
“ஒரு நடிகையாக இருப்பதில் பல சவால்கள் உள்ளன. எனது மாதாந்திரப் பயணங்கள், தங்குமிடம், டயட் உணவுகள், உடற்பயிற்சி , தனிப்பட்ட பயிற்சியாளர்  மற்றும் அழகு பராமரிப்பு  என அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே மாதம் ரூ. 5 லட்சம் வரை செலவாகிறது. ஒரு நடிகையின் மார்க்கெட் அவரது தோற்றத்தைச் சார்ந்தே இருப்பதால், ஜிம் மற்றும் டயட் விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது.
அதுமட்டுமல்ல, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அதற்கான மேக்கப், ஆடை அலங்காரம், ஹேர் ஸ்டைலிங் மற்றும் அந்தப் புகைப்படங்களை எடுக்க ஒரு புரொபஷனல் போட்டோகிராபர் என எல்லாவற்றையும் சேர்த்தால் சுமார் ரூ. 1 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சில நேரங்களில் இந்தச் செலவுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், பல நேரங்களில் நடிகைகளே தங்கள் சொந்தப் பணத்திலிருந்து இந்த ஒரு லட்ச ரூபாயைச் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்