சினிமா

முதல்வர் விஜய்க்கு வெங்கட்பிரபு கொடுத்த சூப்பர் கிஃப்ட்!.. அப்பவே கணிச்சி சொன்னாரே!

30 வருடங்களுக்கு மேல் நடிகராக வலம் வந்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் விஜய். அதன்பின் அரசியலுக்கு வர ஆசைப்பட்டு தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இவரின் ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே சமூக சேவைகளிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் தைரியமாக முடிவெடுத்து அரசியலுக்கு வந்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியை துவங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்போது ஆட்சியை பிடித்திருக்கிறார் விஜய். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறிவிட்டார்.

எனவே அவருக்கு பல்வேறு துறைகளில் இருந்தும் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். குறிப்பாக விஜய் முதல்வரானது திரையுலகினருக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு விஜயை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கிறார். ஏற்கனவே கோட் படத்தில் விஜய் ஓட்டும் காரின் எண் DL 07 PM 2029 என வெங்கட் பிரபு காட்டியிருந்தார். தற்போது அது பழித்து விட்டது. தேர்தல் ரிசல்ட் வெளியானபோது பிரேம்ஜி அந்த ஸ்கீரீன்ஷாட்டை பகிர்ந்து ‘அன்றே சொன்னார் வெங்கட்பிரபு’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்தான், முதல்வர் விஜயி நேரில் சந்தித்த வெங்கட் பிரபு அந்த நேம் போர்ட்டையே அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்