சினிமா

அந்த சீட்டில் அமர எனக்குத்தான் தகுதி இருக்கு! – குக் வித் கோமாளி நடுவர் ரோஜாவை விளாசிய வனிதா விஜயகுமார்

சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 7, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கிய இந்த சீசன், தற்போது 7 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த முறை ‘ஜோடிகள்’ (கணவன் – மனைவி) என்ற புதிய கான்செப்ட்டுடன் களம் இறங்கியுள்ள இந்த ஷோவில், இதுவரை 2 ஜோடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள 7 ஜோடிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இருப்பினும், இந்த சீசனில் நடுவராகப் பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜா குறித்து சமூக வலைதளங்களிலும் திரை வட்டாரத்திலும் விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகையும் முன்னாள் குக் வித் கோமாளி வெற்றியாளருமான வனிதா விஜயகுமார் இது குறித்து அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியபோது கூறியபோது,

ரோஜா என்னுடைய நெருங்கிய தோழிதான், அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், குக் வித் கோமாளி போன்ற ஒரு சமையல் சார்ந்த போட்டியில் நடுவர் இருக்கையில் அமர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்கிற கேள்வி எனக்குள் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை செஃப் தாமுவுக்குப் பிறகு அந்த நடுவர் இருக்கையில் அமர முழுத் தகுதியுள்ள நபர் நான்தான். சமையல் கலை பற்றிய புரிதலும், போட்டியாளர்களை மதிப்பிடும் அனுபவமும் எனக்கு இருக்கிறது என பேசியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்