ஜெயிலர் 2-வுக்கு பின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில்தான் இன்று காலை 10 மணியளவில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்திற்கு தர்மன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர் உடையில் இருக்கும் ரஜினி ஒரு ரவுடியை அடித்து கீழே படுக்க வைத்து அவரின் மேல் கால் வைத்திருப்பது போல போஸ்டரை டிசைன் செய்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் அறிமுக விழா இன்று காலை சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ‘ரஜினி சாரின் படையப்பா, கமல் சாரின் வேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு படங்களும் கலந்த கலவையாகத்தான் தர்மன் படத்தை உருவாக்கப் போகிறோம்.. ரஜினி சார் மிகவும் எளிமையாக பழகுகிறார்.. இத்தனை வருட அனுபவங்கள் இருந்தும், இத்தனை படங்கள் நடித்திருந்தும் ஒரு அறிமுக நடிகர் போல ஆர்வம் காட்டுகிறார்.
கமல் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.. அவருக்கும் நன்றி.. இந்த படம் 5 ரூபாய் மருத்துவரை பற்றிய கதை அல்ல.. இது வேறு கதை.. குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு திரில்லர் படமாக தர்மன் இருக்கும்’ என அவர் கூறியிருக்கிறார்.

