தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய திரைப்படங்களில் நடித்தவர் சமந்தா. நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதன்பின் பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமுரு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சமந்தா கர்ப்பமாகவும் இருக்கிறார்..
சமீபத்தில் சமந்தாவின் உருவான ‘மா இண்டி பங்காரம்’ என்கிற திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சமந்தா ‘மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி எனக்குள் இன்னும் முழுமையாக இறங்கவில்லை. மிகவும் குறைந்த பட்ஜெட்டில்தான் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். படப்பிடிப்பு நாட்களை குறைக்க வேண்டும் என்பதற்காக பல கடினமான நாட்களை கடந்து உழைத்திருக்கிறோம்.
படம் ஒரு டிக்கெட்டாவது விற்குமா, போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியுமா என்ற பயம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. ஏனெனில் சினிமாவின் தற்போதைய நிலையில் மிகவும் மோசமாக இருக்கிறது. எந்த படம் ஓடும்? எது ஓடாது? என்று யாராலும் கணிக்க முடியவில்லை. நாம் சரியான காரணத்திற்காகத்தான் படம் எடுக்கிறோம் என்று நம்மை நம்பி படம் நன்றாக வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்வது தவிர வேறு வழியில்லை’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.

