இந்தியா

டாக்டர் ராமதாஸை சந்தித்த அன்புமணி.. இருவரும் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சி… வைரல் புகைப்படம்…!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இன்று தனது 61-ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார். இந்த நெகிழ்ச்சியான குடும்ப தருணத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தந்தையை சந்திப்பதற்காகப் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் வருகை தந்தார்.

திருமண நாள் வாழ்த்து பெற வந்த தனது மகன் அன்புமணியை கண்டதும், மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியடைந்தார். பாச பிணைப்போடு தனது மகனை ஆரத்தழுவி, கட்டியணைத்து அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தனது பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் பலரும் உடன் இருந்தனர்.

அரசியல் களத்தில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தலைவர்களின் இந்த நெகிழ்ச்சியான பாசப் போராட்டம் மற்றும் குடும்பத் தருணம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பா.ம.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்