ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரோலும் போரை துவங்கியதால் ஈரான் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் இந்தியாவிலும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்தது. கடந்த நான்கு மாதங்களாக போர் நடைபெற்று வந்த நிலையில் ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கியது. அதில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன..
ஆனால் ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.
அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால் ஹார்மூச் நீரிணையை ஈரான் திறந்தது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலில் கோபமடைந்த ஈரான் தற்போது ஹார்மூஸ் நீரிணையை மூடிவிட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஹார்மூஸ் நீரிணையை மூடினால் உங்களின் நாடே இருக்காது.. ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் வேலையை செய்யக்கூடாது. கப்பல் போக்குவதற்கு இடையூறு ஏற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. தேவைப்பட்டால் ஹார்மூஸை அமெரிக்கா கைப்பற்றும்’ எனவும் எச்சரித்திருக்கிறார்.

