உலகம்

உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது!.. டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை..

அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. எனவே, ஹார்மோஸ் நீரிணையை ஈரன் திறந்தது.

அதேநேரம் தாங்கள் சொல்லும் பாதை வழியாக மட்டுமே கப்பல்கள் செல்லவேண்டும்.. இல்லையென்றால் தாக்குவோம் என ஈரான் குறியது. ஒரு சரக்குக் கப்பலையும் ஈரான் தாக்கியது. இதனால் கோபமடந்த அமெரிக்கா ஈரானை தாக்கியது. ஒருபக்கம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இப்படி கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி தாக்கி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. அமெரிக்காவின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. ராணுவ ரீதியாக இந்த மோதலை முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் ஈரான் என்கிற ஒரு நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும்’ என எச்சரித்திருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘உங்களின் நடவடிக்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் வாழும் நரகத்திற்கு தள்ளப் போகின்றன.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சொல்வதை நீங்கள் கேட்பதால் ஒட்டுமொத்த பிராந்தியமும் எரிய போகிறது’ என்று பதிவிட்டிருக்கிறார்.

சமீபத்தில் அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே அமைதிப்பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நின்றது போன்ற தோற்றம் ஏற்பட்டு மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், கடந்த 2 நாட்களாக நடக்கும் மோதல்கள் உலக நாடுகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த