சினிமா

வடிவேல் உண்மையாவே நடிக்கிறான்.. கவுண்டமணி அப்பவே சொன்னாரு!.. வி.சேகர் பேட்டி!..

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. ராஜ்கிரண் தாயரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அவரின் காமெடிக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.ஆனால் கடந்த சில வருடங்களாகவே வடிவேலுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. வயதாகி விட்டதால் அவரது காமெடியும் ஒர்க் அவுட ஆகவில்லை.

இந்நிலையில்தான் மறைந்த இயக்குனர் வி.சேகரின் பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

எனது இயக்கத்தில் வடிவேலு நிறைய படங்களில் நடித்துள்ளார். என்னை பார்க்க வரும் போதெல்லாம் காலை தொட்டு கும்பிடுவார். ஒரு நாளைக்கு பத்து முறை கூட கும்பிடுவார்.. அப்ப கவுண்டமணி ஒன்னு சொல்லுவாரு.. ‘ஒருத்தன் வந்தவுடனே உங்க காலை தொட்டு கும்பிட்டா அது தப்பில்லை.. ஆனா பல தடவை கும்பிடுறான்னா அவன் காலவாறப்போறான்னு அர்த்தம்’. நாங்கலாம் படத்துக்காக நடிக்கிறோம் இவன் உண்மையாவே நடிக்கிறான்’ என சொன்னார். அவர் சொன்னது உண்மை என்று எனக்கு பின்னாடிதான் தெரியவந்தது’ எனக் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்