நடிகை குஷ்பு நடித்த பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாரவி. குஷ்புக்கு பெயரை வாங்கி கொடுத்த சின்னத்தம்பி படத்தில் கூட அவரின் மூத்த அண்ணனாக நடித்திருந்தார். குறிப்பாக பிரபுடன் இணைந்து குஷ்பு நடித்த பல படங்களில் ராதாரவி இருப்பார்.
ஒருபக்கம் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி இயக்கிய பல படங்களிலும் ராதாரவி நடித்திருக்கிறார். இந்த நிலையில்தான் சமீபத்தில் குஷ்புவின் மகள் அவந்திகாவுக்கு கோவாவில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் விஜய் உட்பட பலருக்கும் பத்திரிக்கை கொடுத்தார்கள் சுந்தர்.சி – குஷ்பு தம்பதி.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கோவாவில் நடந்த திருமணத்தில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில்தான், ஆனால் நடிகர் ராதாரவி இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் தற்போது ஊடகம் ஒன்றில் இதுபற்றி பேசிய ராதாரவி ‘எனக்கு பத்திரிக்கை வைக்கவில்லை.. அதனால் நான் செல்லவில்லை.. தேவையில்லை என நினைத்திருக்கலாம்.. சுந்தர்.சி தேர்தலில் போட்டியிட்டபோது நான் தேவைப்பட்டேன்.. இப்போது நான் தேவைப்படவில்லை’ என்று பேசியிருக்கிறார்.

