குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரேன்யன்சு ராணா மற்றும் பிரதாம் பெங்கவலா. இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் 12ம் வகுப்பு கோடை விடுமுறையில் உருப்படியாக ஏதாவது செய்யலாம் என நினைத்து 90 ஆயிரத்தை முதலீடு செய்து ஒரு கோல்டு காபி கடையை தொடங்கினார்கள்..
அதில் மூன்றே மாதங்களில் 1.60 லட்சம் சம்பாதித்துள்ளனர். 90 ஆயிரம் முதலீட்டில் தொழிலை தொடங்கியவர்கள் கோல்ட் காபியை மிகவும் குறைந்த விலைக்கு விற்று அந்த பகுதி மக்களிடம் பிரபலமாகியிருக்கிறார்கள். தாங்கள் படித்த பள்ளி கண்காட்சியில் விளையாட்டாக 150 கோல்ட் காபியை விற்பனை செய்திருக்கிறார்கள். அதற்கு கிடைத்த நல்ல வரவேற்பை பார்த்து அதையே தொழிலாக மாற்றி தற்போது வெற்றி பெற்று காட்டியுள்ளனர்.
17 வயதில் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊரை சுற்றுவது, பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக பறப்பது, நடிகர்களின் புகழ் பாடுவது, தியேட்டர் மற்றும் செல்போனில் நேரம் செலவழிப்பது என இளைஞர்கள் தடம் மாறிஜ் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் ஒரு தொழிலை தொடங்கி அதில் வெற்றி பெற்றும் காட்டியுள்ளனர். இவர்கள் இரண்டு பேரையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

