உலகம்

கமேனியின் இறுதிச்சடங்கு!.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!…

ஈரான் மற்ற நாடுகள் போர்த்தொடுக்கும் போது தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மற்ற நாடுகளை தாக்குவதற்காகவும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பிடிக்கவில்லை, இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரான் நாட்டின் மீது இரண்டு நாடுகளும் போர் தொடுத்தன.

போர்த் தொடங்கி அடுத்தநாளே இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுமார் 19 பேர் அந்த குண்டு வீச்சில் பலியானதாக சொல்லப்பட்டது. அதன் பின் கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரும் இஸ்ரேல் தாக்கியதில் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாக இருப்பதாக சொல்லப்படுகிறது..

இந்நிலையில்தான் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு வருகிற 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரானில் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து டெஹ்ரான், மஹ்மத் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. தற்காலிக வான்வெளி கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறும் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை தங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் ராணுவம் எச்சரித்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த