உலக அளவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்துதான். கால்பந்து விளையாட்டில் பல நாடுகள் விளையாடினாலும் அர்ஜென்டினா அதில் குறிப்பிடத்தக்கது. அதிலும் அந்த நாட்டின் அணி வீரர் மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அர்ஜென்டினா அணி களத்தில் விளையாடினால் அனைவரின் பார்வையும் மெஸ்ஸி மீதே இருக்கும். அவரும் அசத்தலாக கோல்களை அடித்து அணியை வெற்றி பெற வைப்பார். கால்பந்து மூலம் நிறைய கோடிகளை மெஸ்சி சம்பாதித்தாலும் ஒரு ஹாலிவுட் படத்தின் டீசரில் நடித்து 100 கோடிக்கும் மேல் அவர் சம்பளம் வாங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது..
Spider man : Brand new day என்கிற ஹாலிவுட் திரைப்படம் வருகிற 31ம் தேதி உலகம் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டீசரில் மெஸ்ஸி 40 வினாடிகள் நடித்திருக்கிறார். 5 வசனங்கள் மட்டுமே பேசியிருக்கிறார். ஆனால் அதற்கு அவருக்கு ரூ.143 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இது பலரையும் வாயை பிளக்க வைத்திருக்கிறது.

