உலகம்

7 வருடங்களாக கோமாவில் கணவர்!.. காலை கடித்து சரி பண்ணிய மனைவி!..

கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று. ஆனால் மனதிற்குள் அன்பு மட்டும் அதிக அளவில் இருந்தால் எந்த கஷ்டமும் தெரியாது.

தான் நேசித்த பெண் இறக்கம் தருவாயில் கூட அவளை காதலித்த வாலிபர் அப்பெண்ணை திருமணம் செய்த சம்பவங்கள் நடந்திருக்கிறது.

சமீபத்தில் கூட விபத்தில் முதுகெலும்பு உடைந்த பெண்ணை அப்பெண்ணின் காதலர் திருமணம் செய்த வீடியோ வெளியானது. இந்நிலையில்தான் 7 வருடங்களாக கோமாவில் இருந்த தனது கணவரை அவரின் மனைவி தனது அன்பால் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சம்பவம் வெளியே தெரிய வந்திருக்கிறது.

அந்தப் பெண்ணின் பெயர் சாங் மெய். ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரின் கணவர் கீழே விழுந்ததில் அவரின் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார். கடந்த 7 வருடங்களாக தனது கணவரை வீட்டிலேயே வைத்து அவருக்கான பணிவிடைகளை சாங் மெய் செய்து வந்தார்.

தினமும் கணவருடன் பேசுவது, கை கால்களை அசைத்து விடுவது, அவரின் கால் நரம்புகளை தூண்ட காலை பல்லால் மெதுவாக கடிப்பது என பல முயற்சிகளை செய்து வந்திருக்கிறார். அவரின் 7 வருட முயற்சியின் வீண்போகவில்லை. தற்போது அவரின் கணவர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவை பெற்றிருக்கிறார். சுயநினைவு வந்ததும் மனைவியை பார்த்து அவர் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ லவ் யூ’, இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த