சினிமா

அனிருத் திருமணத்துக்கு தேதி குறிச்சாச்சி!.. கல்யாண பொண்ணு அவர்தான்!…

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அனிருத் இசையமைத்து உருவான திரைப்படங்களிக் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

துவக்கத்தில் தனுஷின் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் மட்டுமே இசையமைத்தார். ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து விட சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருக்கமாக மாறிய அனிருத் அவரின் எல்லா படங்களுக்கும் இசையமைத்தார். அதேபோல், விஜயின் அனைத்து படங்களுக்கும் அனிருத் இசை என மாறியது.

அதேபோல், ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் அனிருத் மாறிவிட்டார். ஒருபக்கம் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அனிருத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

இது உண்மைதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில்தான், வருகிற நவம்பர் 12ம் தேதி மெக்சிகோவில் உள்ள சிசல்ஸ் தீவில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்