கரூரில் பேசிய முதலமைச்சர் விஜய் நாங்கள் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு சென்றபோது ‘கூட்டம் அதிகமாக இருக்கிறது.. கூட்டத்தை ரத்து செய்துவிடுங்கள்’ என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருந்தால் அந்த சம்பவம் நடந்திருக்கிறாது. காவல்துறை நினைத்திருந்தால் எந்த கூட்டத்தையும் ரத்து செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பைபாஸிலிருந்து நான் பேசிய இடம் வரைக்கும் என்னை காவல்துறை கூட்டிச் சென்றது அது மிகப்பெரிய நாடகம்’ என பேசினார். மேலும், அவர்களை அப்படி செய்ய சொன்னது யார்? என அவர் கேள்வி எழுப்பினார்..
ஆனால் முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டை திமுக மறுத்துள்ளது. கரூரில் அசம்பாவிதம் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஏடிஜிபி ‘கரூர் மாவட்ட டி.எஸ்.பி பலமுறை சொல்லியும் தவெக கேட்கவில்லை.. விஜய் பேசியதற்கு 50 அடிக்கு முன்பே ‘இங்கேயே நின்று பேசுங்கள்.. கூட்டம் அதிகமாக இருக்கிறது’ என்று டிஎஸ்பி சொன்னார். ஆனால் அந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் அதைக் கேட்கவில்லை’ என சொன்ன வீடியோவை பகிர்ந்து முதல்வர் விஜய் சொன்னது பொய் என கூறியிருந்தது..
இந்நிலையில், திமுக ஆதரவாளரும் இயக்குனருமான இயக்குனர் அமீர் தனது whatsapp ஸ்டேட்டஸில் ‘இறந்த 41 பேர் குடும்பத்தினரும் இன்று அந்த கூட்டத்தில் கைதட்டி மகிழ்ந்தார்களா? உங்கள் கைகளில் காவல்துறை இருந்தும் இன்னும் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.. மக்களை முட்டாளாக்கும் இந்த கோயபல்ஸ் தத்துவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும் என்று தெரியவில்லையே’ என பதிவிட்டு இருக்கிறார்.

