கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு கரூரில் சாலை போடாமலேயே 3.2 கோடி ஊழல் செய்து விட்டதாக எழுந்த புகாரில் வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மாதம் 25ஆம் தேதி அவரின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தியது..
அதன்பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவரோ தான் சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு ஆஜராவதாகவும் கூறினார். இந்த நிலையில்தான் சமீபத்தில் கரூரில் பேசிய முதல்வர் விஜய் ‘ஒருவர் சிங்கப்பூருக்கு சென்று ஓடி ஒளிந்து கொண்டார்’ என பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு ‘நான் ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை.. திமுக அப்படி வளர்க்கவில்லை.. 2016ம் வருடம் முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன்..
லஞ்ச ஒழிப்புத்துறை சம்மனுக்கு மரியாதை கொடுத்து பதில் கடிதம் அனுப்பினேன்.. 12ம் தேதிக்கு மேல் எந்த தேதியில் அழைத்தாலும் ஆஜராக நான் தயாராக இருக்கிறேன் என அதில் கூறியிருந்தேன்.. சட்டமன்றத்தில் நான் பேசவே கூடாது என்று நினைக்கிறார்கள்.. அதனால்தான் இப்படி என் மீது பொய்யான வாழ்க்கை போட்டுள்ளனர்’ என அவர் கூறியிருக்கிறார்..

