இலங்கை

பேராசிரியர் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் கலைப்பீடாதிபதி குறித்த முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.

அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிலையிலையே , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் , நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியால் கடந்த முதலாம் திகதி , தன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி , அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் , பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அவதூறான பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.

அத்துடன் எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப கட்டளையிட்ட மன்று , எதிர் மனுதரர்களின் காரணங்காட்டுதலுக்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்