தமிழகத்தில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே உணவகத்துடன் கூடிய மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கே மது அருந்தவதோடு விருப்பப்பட்ட உணவுகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்ளலாம். இது குடிமகன்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
ஆனால், தமிழகத்தில் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகள் என்பது தனியாக செயல்படுகிறது/ அதுவும் பல டாஸ்மார்க் கடைகளில் அருகில் பார் கூட கிடையாது. அப்படியே பாரில் மது அருந்தினாலும் சாப்பிட வேண்டுமெனில் ஹோட்டலுக்குதான் செல்ல வேண்டும். இது பல பிரச்சனைகளை கொண்டுவருகிறாது. இந்நிலையில்தான், உணவகத்துடன் கூடிய மதுபான கூடங்களை அதிகரிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது..
FL2, FL3 மனமகிழ் மண்டங்களுக்கு மதிப்பு கூட்டு வரியில்லாததால் டாஸ்மார்க் நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. டாஸ்மாக் கடையுடன் இயங்கும் பார்களின் எண்ணிக்கை குறைத்து ரெஸ்டோ பாருக்கு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ரெஸ்டோ பார்களை விரும்பும் மதுபான பிரியர்களுகு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

