இலங்கை

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தம்பையா பிரகாஷ், 26 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 41ஆவது வயதில் இன்று பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த பாதிப்பின் வலியை, பிணை வழங்கிய, நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, நான்கு சரீரப் பிணை, கடவுச் சீட்டை ஒப்படைத்தல், இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை பிரிவிற்கு சமூகமளித்தல் ஆகிய இறுக்கமான நிபந்தனைகளுடன் பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிணை நிபந்தனைகளில் ஏதேனும் மீறல் ஏற்பட்டால், பிணை ரத்து செய்யப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தனுஷ் எனப்படும் தம்பையா பிரகாஷ் என்ற அரசியல் கைதியையே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்