சினிமா

250 கோடி கூட வராது போலயே!.. 5 நாட்களில் மொத்தமா காலியான ஜனநாயகன் வசூல்!..

விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்று தற்போது தமிழக முதலமைச்சராக மாறியிருக்கும் நிலையை அவர் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ம் தேதி உலகமெங்கும் ரிலீசானது. அதேநேரம் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அவரின் ரசிகர்களை திருப்தி படுத்துவது போலவே உருவாக்கப்பட்டிருந்தது.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இந்த படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருந்ததால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தது. மேலும், படத்தின் எடிட்டட் வெர்ஷன் சமூக வலைதளங்களில் லீக் ஆகி ஒரு கோடி பேர் வரை பார்த்து விட்டதால் படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை.

இந்த படத்தை பார்க்க விஜயின் ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் ஆர்வம் காட்டியதால் படத்திற்கு பெரிய வசூல் இல்லை படம் வெளியாக 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஜனநாயகம் திரைப்படம் உலகம் முழுவதும் 215 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அதிலும் இந்தியாவில் இந்த படம் 100 கோடியை மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளது என டிரெடிங் வட்டாரத்தில் சொல்கிறார்கள். நேற்று இந்தியாவில் ஜனநாயகம் திரைப்படம் 11 கோடி மட்டுமே வசூல் செய்து விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ஜனநாயகன் திரைப்படம் 250 கோடி வசூலை கூட தொடாது என்று சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்