தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருக்கிறது. கால் டாக்ஸியை போலவே கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பைக் டாக்சி பரவலாக காணப்படுகிறது. ஏதேனும் இடத்துக்கு செல்ல விரும்பினால் பைக்கில் வந்து நம்மை கூட்டி சென்று இறக்கி விடுவார்கள்..
அதற்கு குறிப்பிட்டு தொகையை வசூலித்துக் கொள்வார்கள். இதற்கென Rapido போன்ற பிரத்யோக மொபைல் ஆப்கள் வந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்ஸி சேவை நடத்த அனுமதிப்பதற்கான விதிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை. விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். டாக்சி ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பிறகு இதில் கொள்கை முடிவு எடுக்கப்படும்.. அதுவரை பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை எனவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
விரைவில் இது தொடர்பாக முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். இது பைக் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

