கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதலனுக்காக மனைவியே தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பான செய்தி வெளியாக வருகிறது. அதுவும் பல இடங்களில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான் தனது மனைவிக்கு இன்னொரு காதல் இருப்பதை தெரிந்து கொண்ட கணவர் மனைவியை அந்த காதலுடன் சேர்த்து வைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசம் சாண்ட் கபீர் நகரில் வசித்து வருபவர் புத்திரம் நிஷாத். இவர் பூல்மதி(37) என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 21 வருடங்கள் ஆகிவிட் நிலையில் இந்த தம்பதிக்கு 5 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் அவரை விட 13 வயது குறைந்த ஒருவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த புத்திரம் நிஷாத் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.
அந்த கிராமத்தில் உள்ள அவதேஷ் கோவிலில் இருவருக்கும் அவர் திருமணம் செய்து வைத்தார். நிஷாத் முன்னிலையில் அவரது மனைவிக்கு அவரின் காதலர் குங்குமப்பொட்டை வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில். இது தொடர்பாக கருத்து தெரிவித்த புத்திரம் நிஷாத் ‘எனக்கு பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் அடைபட்டு சாக விருப்பம் இல்லை.. நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்’ என கூறியிருக்கிறார்.

