ரஷ்யாவை சேர்ந்த மாடலும், நடிகையுமான இரினா ருடகோவா, இந்தியாவின் மும்பை லோகந்த்வாலா சந்தையில் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட பானி பூரி விலை குறித்து முன்பு விமர்சித்து பேசியிருந்தார்.
தற்போது துபாய் விமான நிலையத்தில் 42 திர்ஹம்ஸ், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,096 ரூபாய்க்கு விற்கப்படும் பானி பூரியை பார்த்ததும் தனது முந்தைய கருத்தை மாற்றி கொண்டுள்ளார்.
மும்பையில் 60 ரூபாய்க்கு விலை அதிகம் என குறை கூறியது தவறு என்றும், துபாயுடன் ஒப்பிடும்போது மும்பை விலை மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் மும்பைக்கே திரும்புவதாக அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். முன்னதாக மும்பை பானி பூரியைச் சுவைத்து மகிழ்ந்த அவர், அதனைப் பெரிதும் ரசித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் தனது கலை பயணத்தை தொடங்கிய இரினா ருடகோவா, ‘ரியாலிட்டி கியூன்ஸ் ஆஃப் தி ஜங்கிள்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதுடன், பிக்பாஸ் மராத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளார். துபாய் மற்றும் மும்பை பானி பூரி விலைகளின் இந்த வியக்கத்தக்க ஒப்பீடு இணையத்தில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

