இலங்கை

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் கையளிப்பு!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கிடைக்கப்பெற்ற 7 பிரதிகளுக்கு மேலதிகமாக, இந்த இரண்டு மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) பாராளுமன்றில் அறிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சபாநாயகருக்கு மூன்று மனுக்களின் பிரதிகள் கிடைத்திருந்தன.

நேற்றைய தினம் (20) மேலும் 4 மனுக்களின் பிரதிகள் அவருக்குக் கிடைத்திருந்தன.

இதற்கமைவாக, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக சபாநாயகருக்கு இதுவரை 9 மனுக்களின் பிரதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்