உலகம்

நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

வடக்கு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல வீடுகளும், வாகனங்களும், கட்டிடங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அதோடு சேர்ந்து பல மனிதர்களும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் 300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

மேலும் 1100 க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளனர். அவர்களில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்களும் அடக்கம். நேபாளத்தின் மேல் பகுதியில் பனிப்பாறை உடைந்து அங்கிருந்த நீர் வேகமாக வெளியேறியது இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்த வெள்ளத்தால் நேபாளமே உருக்குலைந்து போயிருக்கிறது. பல முக்கியமான கட்டிடங்கள் சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்டது. இந்நிலையில்தான், நேபாளத்திற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருப்பதாக சீனா எச்சரிக்கை செய்திருக்கிறது.

சீனா – நேபாள எல்லையில் Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆறுகள் இணையும் இடத்தில் நிலச்சரிவு காரணமாக ராட்சச தடுப்பு ஏரி திடீரென உருவாகி நிரம்பி வழியும் நிலையில் இருப்பதாக சீன அரசு அவசர எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அடுத்த 72 மணி நேரத்திற்குள் இந்த அணை உடைந்து இரண்டாம் கட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது எனவும் அந்த நாடு தெரிவித்திருக்கிறது.

புதிதாக உருவாகியிருக்கும் அந்த ஏரியில் இன்று காலை நிலவரப்படி 20 லட்சம் கன மீட்டர் தண்ணீர் இருக்கிறது எனவும், ஏற்கனவே ஏறி நிரம்பி ததும்ப ஆரம்பித்துவிட்டது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த