தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் பூர்ணா. தமிழில் இவர் பல படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஆலோ அலப்பலோ’ பாடலுக்கு பூர்ணா நடனமாடியிருந்தார். இது தொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த பாடலில் பூர்ணா மிகவும் சிறப்பாக நடனமாடியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்..
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய பூர்ணா எனக்கு 5 மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது குழந்தை பிறந்தது. ஜெயிலர் 2 படத்தின் ஆலோ அலப்பல பாடலுக்காக நான் ஆறு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, அதை முடித்துவிட்டு அகண்டா படத்தில் நடிக்க சென்றுவிட்டேன்.. பிறகுதான் நான் கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரிய வந்தது மிகவும். ‘இப்படி நடனமாடிவிட்டு நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை.. மீண்டும் ஒருமுறை செக் செய்து பார்’ என என் அம்மா கூறினார். ஆனால் இரண்டாவது முறையாக செக் செய்த போதும் கர்ப்பமாக இருந்தது உறுதியானது..
நான் கர்ப்பமாக இருக்கும் போதே ‘ஆலோ ஆலப்பலோ’ பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன் என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது. எனது இரண்டாவது குழந்தையை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இந்த பாடலுக்கு நடனமாடியதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்போது அந்த பாடலை அனைவரும் பார்த்டு பாராட்டும் போது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த பாடலுக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளும் எனது குழந்தையையே சேரும்’ என அவர் தெரிவித்திருக்கிறார்..

