இந்தியா

சௌமியா அன்புமணிக்க்கு சட்டசபையில் கிடைத்த பாராட்டு!..

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனனர் ராமதாஸின் மருமகள், அன்புமணி ராமதாஸின் மனைவி என அறியப்படுபவர் சௌமியா அன்புமணி. அதிக அரசியலில் தலை காட்டாமல் இருந்த சௌமியா கடந்த சில வருடங்களாகத்தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கினார்..

தனது கணவருக்காக தர்மபுரி பகுதியில் வாக்குகளை சேகரித்தார். அப்போதுதான் முதன்முதலாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக மாறியிருக்கிறார்..

சட்டசபையில் மிகவும் நன்றாக பேசக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களில் முக்கியமானவராக சௌமியா அன்புமணி இருக்கிறார்.. எதை பேச வேண்டுமோ அதை மிகவும் சுருக்கமாக தெளிவாகவும் பேசி விடுகிறார்.. சட்டசபையில் சௌமியா அன்புமணியின் பேச்சை பொதுமக்கள் மட்டுமல்லாமல் முதலமைச்சர் விஜயும் பாராட்டி இருந்தார்..

இந்நிலையில்தான், இன்று சட்டசபையில் மதுவிலக்கு பற்றி சௌமியா அன்புமணி பேசியதை துணை சபாநாயகர் ரவிசங்கர் பாராட்டு தெரிவித்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் எப்படி அவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை சௌமியா அன்புமணியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.. தேவையில்லாத சர்ச்சை.. இடைச்சொல் இதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க, 100 சதவீதம் சமுதாயரீதியாக மட்டுமே பேசுகிறார்’ என்று அவருக்கு சபாநாயகர் ரவிசங்கர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்