லண்டனின் சைனாடவுன் பகுதியில் நடிகை த்ரிஷா தனது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. படப்பிடிப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் த்ரிஷா, தற்போது எந்த அவசரமும் இல்லாமல் லண்டனின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து வருகிறார்.
லண்டனில் வசிக்கும் சில தமிழர்கள், சாலையில் சென்ற பெண் த்ரிஷாவை போல இருப்பதை கவனித்து அருகில் சென்று பார்த்தபோது, அவர் உண்மையிலேயே நடிகை த்ரிஷாதான் என்பதை அறிந்துள்ளனர். இதையடுத்து, அவரை தொலைவில் இருந்து எடுத்த சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தனது தோழிகளுடன் லண்டனில் உள்ள உணவகங்களுக்கு சென்று உணவருந்தும் த்ரிஷா, சுற்றுலா இடங்களையும் உற்சாகமாக ரசித்து வருகிறார். கருப்பு நிற ஜம்பர், நீல நிற ஜீன்ஸ் என மிகவும் எளிமையான உடையில் அவர் வலம் வரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
லண்டனில் கடைக்கு சென்றபோது த்ரிஷாவை நேரில் பார்ப்போம் என்று நினைக்கவே இல்லை என பலரும் ஆச்சரியத்துடன் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

