‘டூரிஸ்ட் ஃபேமலி’, ‘ஹார்ட் பீட்’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகை யோகலட்சுமி, தற்போது கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.
முதல்முறையாக ‘ஹார்ட் பீட்’ இணையத்தொடரில் நடித்ததன் மூலம் திரையுலகில் கவனம் பெற்ற யோகலட்சுமி, அதன்பிறகு அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமலி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ‘அரசன்’ திரைப்படத்திலும் நடித்து வரும் அவர், அபிஷன் மற்றும் சிவ ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி கோர்ட்’ இணையத்தொடரும் வெளியானது.
இந்நிலையில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய கன்னட திரைப்படத்தில் யோகலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டர் நாளை காலை 11.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்குபவர் குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை.
கன்னட திரையுலகில் தனது புதிய பயணத்துக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என யோகலட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

