உலகம்

Cognizant ஊழியர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்க தடை!.. அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்!…

இந்தியாவில் சென்னை, பூனே, பெங்களூர், லக்னோ, மும்பை, ஹைதராபாத் போன்ற முக்கிய பெரிய நகரங்களில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்கள் பிராஜெக்டகளுக்கு அமெரிக்காவை நம்பியிருக்கின்றன. இந்தியாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தே பிராஜெக்டுகளை வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவிலிருந்தே இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பணிபுரிந்து கொடுக்கிறார்கள். ஒருபக்கம் வாய்ப்பு கிடைப்பவர்கள் அமெரிக்காவில் போய் செட்டிலாகி அங்கேயே பணிபுரிகிறார்கள்.. அவர்களில் பலரும் அமெரிக்காவின் குடியுரிமையை வாங்கி அங்கேயே நிரந்தரமாக செட்டிலாகிவிடுகிறார்கள்.

ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் மற்ற நாடுகளிலிருந்து பலரும் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி நிறைய கெடுபிடிகளை கொண்டு வந்தார். ஏற்கனவே H1B1 விசாவுக்கான கட்டணத்தை கிட்டத்தட்ட ஒரு கோடி அளவு அவர் உயர்த்தி விட்டார்.

இந்நிலையில்தான் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிரீன் கார்டு வழங்க PERM சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க COGNIZANT நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இடைக்கால தடை விதித்திருக்கிறது. விசா மோசடி புகார் குறித்து விசாரணை நடப்பதால் இந்த நடவடிக்கை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், அமெரிக்க ஊழியர்களை பாதிக்கும் வகையில் Cognizant நிறுவனம் குறைந்த ஊதிய பிரிவில் விசா தாக்கல் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த