கனடா

400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய முடிவு

கனடாவின் ரொரன்றோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் ஒருவர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவிற்கு இரண்டு பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ரொரன்றோ விமான நிலைய சரக்குகள் சேமிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த அப்பார்சல்களில், 20 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான 6,600 தங்கக் கட்டிகளும், 2 மில்லியன் டொலர்கள் ரொக்கப் பணமும் இருந்தன. அன்றைய தினம் போலி ஆவணங்களுடன் வந்த நபர் ஒருவர் அப்பார்சல்களைத் தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். அன்றிரவு 9.30 மணியளவில் உண்மையான ஆவணங்களுடன் வந்த நபர்கள் அணுகியபோதே மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மொத்தம் 9 நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களில் ரொரன்றோவைச் சேர்ந்த 40 வயதான அலி ராசா என்பவரும் ஒருவர்.

இந்நிலையில், அலி ராசாவுக்கு எதிரான வழக்கு முழுமையாகச் சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அரசுத் தரப்பு, அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. இதன்மூலம் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இத்தீர்ப்பை வரவேற்றுள்ள அலி ராசா, தான் ஒரு நிரபராதி என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், நகைத் தொழில் செய்துவரும் அலி ராசாவின் நற்பெயருக்கு இந்த வழக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி, தொழிலில் பெரும் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளதாகவும், இழந்த நற்பெயரை மீட்டெடுக்கப் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் அவரது சட்டத்தரணி பிரிஜ் மோகன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு