இந்தியா

மம்தா பானர்ஜியின் கட்சி பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்.. மே.வங்கத்தில் பரபரப்பு..

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அதிரடியாக முடக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் ரெஜினாகர் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் இடைத்தேர்தல்களில் இரு பிரிவினரும் இந்தப் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தக் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சி மீதான உரிமை கோரி மம்தா பானர்ஜி மற்றும் அருப் ராய், தலைமையிலான கிளர்ச்சியாளர் அணி என இரு தரப்பினரிடையே மோதல் நிலவி வருவதால் தேர்தல் ஆணையம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான புதிய பெயர்களை தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2026 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, மம்தா பானர்ஜிக்கு எதிராக ஏற்பட்ட உட்கட்சி பூசலே இந்த சிக்கலுக்குக் முக்கிய காரணமாகும். இறுதி முடிவு வரும் வரை இரு பிரிவினரும் தனித்தனிப் பெயர்கள் மற்றும் சுயேச்சை சின்னங்களின் கீழ் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்