சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது 2ம் பாகம் உருவாகியிருக்கிறது. இந்த படத்திலும் சிவ்ராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
மேலும், விஜய் சேதுபதி, ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்ட சிலரும் சிறப்பு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதுவரை வெளியான பாடல்கள் ஹிட் அடித்துள்ள நிலையில் தற்போது ஒரு சூரியன். ஒரு நிலா பாடல் வெளியாகியிருக்கிறது.
இந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்த பாடலை ஹீன்ஸ்பெர்க் மற்றும் சூப்பர் சுப்பு இணைந்து எழுதியுள்ளனர். யார் வந்தாலும் போனாலும் ஒரு தலைவன்தான் என்கிற வரி ரஜினிக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

