ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ள புதிய திரைப்படம் மீசைய முறுக்கு 2 . கடைசி உலகப் போர் படத்துக்குப் பிறகு ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம், நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மீசைய முறுக்கு 2 படத்தில் *கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், ஹர்ஷத் கான், எஸ். மணிகண்டன், கருணாஸ், யோகி பாபு, பாபா பாஸ்கர், விஜய் வரதராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் வெளியானதைத் தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் மத்தியில் மீசைய முறுக்கு 2 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆதியின் நடிப்பு, இசை மற்றும் படத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. முதல் பாகமான மீசைய முறுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.3.85 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது ஆரம்பக்கட்ட வசூல் தகவல் என்பதால், அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தில் மாற்றம் இருக்கலாம். மேலும், பாசிடிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு அதிகம் வருவதால் வார இறுதி நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

