உலகம்

ஆஸ்திரேலிய அரசின் வெப்சைட் ஹேக்!.. Open AI CEO-வுக்கு சம்மன்!…

சமீபகாலமாகவே செயற்கை நுண்ணறிவான AI மென்பொருள் துறையில் மிகவும் பிரபலமாகி வருகிறது. மென்பொருள் துறையில் வேலை வேண்டுமெனில் AI தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற நிலையும் தற்போது உருவாகியிருக்கிறது.

எனவே பல மென்பொருள் நிறுவனங்கள் மனிதர்களை விட AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Coding-ஐ எழுதி வாங்குகிறார்ர்கள். எனவே எதிர்காலத்தில் மென்பொருள் துறையில் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு குறையும் நிலையும் உருவாகியிருக்கிறது. சமீபகாலமாகவே கடந்த சில மாதங்களில் பல மென்பொருள்கள் மனிதர்களை வேலையை விட்டு தூக்கி விட்டன..

ஒருபக்கம் AI ரோபோக்கள் சுயமாகவும் சிந்திக்க தொடங்கி விட்டன. குறிப்பாக OPEN AI நிறுவனத்தின் Agent AI தாமாகவே சில கட்டளைகளை தனக்கு பிறப்பித்துக் கொள்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அரசின் MEDICARE தளத்தை ஹேக் செய்தது. அதேபோல், அமெரிக்காவின் மூன்று வெப்சைட்டுகளை OPEN AI ஹேக் செய்ய முயன்றது.

இந்நிலையில், தங்களின் MEDICARE தளத்தை OPEN AI Agent ஹேக் செய்ய முயன்றது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என OPEN AI நிறுவனத்தின் CEO சாம் ஆஸ்ட்மேனுக்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. மேலும், AI-யின் வளர்ச்சியை கட்டுப்படுத்த கோரி வரும் ANTHROPIC CEO டாரியோ அமோடிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த