கற்றது தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அஞ்சலி. இவருக்கு முதல் படத்திலிருந்தே ரசிகர்கள் உருவானார்கள். அதற்கும் கடந்த பல வருடங்களாகவே பல படங்களிலும் அஞ்சலி நடித்தார். சமீபத்தில் கூட விஷால் இயக்கி, நடித்து வெளியான மகுடம் படத்திலும் அஞ்சலி நடித்திருந்தார். ஆனால் அந்த படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.
ஒருபக்கம் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ராமின் படங்களில்தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி சூரியும், நிவின் பாலியும் இணைந்து நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியிலும் அஞ்சலி கலந்து கொண்டார்.. ஒருபக்கம், அஞ்சலி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் அவர் பேசியபோது திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அஞ்சலி என் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்.. ஆனா மத்தவங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று புரியவில்லை. கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாது.. நிறைய யோசிச்சுதான் அதை செய்ய முடியும்’ என கூறியிருக்கிறார்.

