இலங்கை

விதிமீறினால் புள்ளிகள் குறையும்; சாரதிகளுக்கு எச்சரிக்கை!

போக்குவரத்து விதி மீறல்களுக்கான ‘டிமெரிட்’ (குறைமதிப்பு) புள்ளிகள் முறை குறித்த ஆறு மாத கால முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) காலை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை தொடரும் என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஏற்படும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக இந்த முறைமை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், சாரதிகளுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகள் ஒதுக்கப்படும்.

அவர்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்ப அப்புள்ளிகள் குறைக்கப்படும்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம், போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக தற்போது உள்ள இணையவழிக் கட்டண முறைகளை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், இத்திட்டத்தை ஒரு டிஜிட்டல் அமைப்பு வழியாகச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்