சினிமா

தினமும் 15 முறை!.. ராஷ்மிகா மந்தனா என் பாக்கியம்!.. விஜய தேவரகொண்டா உருக்கம்!..

கீதா கோவிந்தம் திரைப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்தவர்கள் விஜய தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து டியர் காம்ரேட் என்கிற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவருக்கும் இடையே லிப் லாக் காட்சியும் இடம் பெற்றிருந்தது..

நல்ல நண்பர்களாக மாறிய இருவரும் ஒரு கட்டத்தில் காதலில் விழுந்தனர். சில வருடங்கள் காதலித்து விட்டு சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர். திருமணமானாலும் ராஷ்மிகா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ரனபாலி என்கிற திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிற 16ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய தேவரகொண்டா ‘ராஷ்மிகா தினமும் என்னிடம் குறைந்தது 15 முறையாவது ஐ லவ் யூ சொல்லிவிடுவார்.. பிஸியான வாழ்க்கையில் இது போன்ற சின்ன சின்ன அன்பான விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம்.. ஆனால் ராஷ்மிகா அதை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்., அவர் எனக்கு மனைவியாக கிடைத்தது எனது பாக்யம்’ என உருகியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்